ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் டவுன் பஞ்சாயத்து, அம்மநாயனார் கோயில் தெருவைச் சேர்ந்த 85 வயதான வரதம்மாள் என்பவர் நேற்று (04-02-2024) அசம்பாவிதமான தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் மாலை டீ போடுவதற்காக மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்துக்கொண்டது. உடல் முழுவதும் பரவிய தீயில் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நெமிலி சப் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.