பனப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி சென்ட்ரிங் தொழிலாளி பலி
பனப்பாக்கம் அருகே உள்ள நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் (65). இவர் சென்ட்ரிங் சாமான்களை வாடகை விடும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை அவளூர் ஜங்ஷனில் பைக்கில் சென்ற சின்னபையன் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் சின்னபையன் படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபையன் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.