பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலைகள் ராணிப்பேட்டைக்கு வந்தது


தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2, 59, 919 சேலைகளும், 2, 69, 532 வேட்டிகளும் வந்துள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள 614 நியாய விலைக்கடைகளுக்கு வேட்டி சேலைகளை வாகனங்கள் மூலம் அனுப்பும் பணி துவங்கி உள்ளது.

இந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1, 58, 812 பயனாளிகளுக்கு சேலைகள் வழங்கப்பட உள்ளன. 1, 60, 532 பயனாளிகளுக்கு வேட்டிகள் வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து பயனாளிகளுக்கும் சேலைகள், வேட்டிகள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.