ஆற்காடு காந்தி நகரைச் சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார் (24) என்பவர் ரத்தினகிரி பகுதியில் டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டதாக ரத்தினகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், அஜித் குமாரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி நேற்று உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு நகல் போலீசார் மூலமாக வேலூர் மத்திய சிறையில் உள்ள அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது.
இதன் மூலம், ஆற்காடு காந்தி நகரில் குற்றச்செயல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.