ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த 36 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரன்-பாக்கியம் தம்பதியின் மகள் அம்சா (36). இவருக்கு தாளிக்கல்லையை சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கழுத்து வலி காரணமாக அம்சா ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்சாவின் தம்பி ரகுராமன் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில், அம்சாவுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.