ஆற்காடு அடுத்த விஷாரம் பகுதியை சேர்ந்தவர் சலீம் பாஷா (21). கூலித் தொழிலாளி. இவர், கடந்தாண்டு அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஆற்காடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து சலீம் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு. சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள வேலுார் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கலைப்பொன்னி விசாரணையில், சலீம் பாஷா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சலீம் பாஷாவுக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அப ராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.