ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (14ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோநகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர்.
பழைய ஆற்காடு ரோடு, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் : அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (14ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
பள்ளூர், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி டவுன், தக்கோலம், சிஐஎஸ்எப், அரிகலபாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்துார், எலத்துார், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன் பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலுார்: ஆற்காடு, பூட்டுத்தாக்கு மற்றும் கத்தியவாடி துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (14ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக, ஆற்காடு நகரம் முழுவதும், ஹவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புபேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன்னிகாபுரம், சாணார்பெண்டை, மேலகுப்பம், கீழ் செங்காநத்தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.