அரக்கோணம் தாலுகா மின்னல் நரசிங்கபுரம் பகுதியில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் வகையில் நின்றிருந்த அய்யப்பன் (45), அவரது மனைவி தேவகி (40), மற்றும் மகன் நரேஷ் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.