திருவலம் அருகே சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக 25வயது மதிக்கத்தக்க வாலிபர் சுற்றி வந்துள்ளார். நேற்று காலை காட்பாடி சாலையில் சென்ற வாகனம் வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியாகியுள்ளார். தகவலறிந்து திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் விரைந்து சென்று வாலிபரின் பிரேதத்தை கைப்பற்றி வேலுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அந்த வாலிபரின் பெயர், விலாசம் குறித்து விசாரணை வருகிறார். நடத்தி