ராணிப்பேட்டை சிப்காட் சோலைநகரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜஸ்வந்த் (17). ராணிப்பேட்டை சிப்காட் பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்சில் பயணம் செய்த சிறுவன், பெரியதாங்கல் அருகே வந்தபோது பஸ் படிக்கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் பின்பக்க தலையில் காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிப்காட் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.