வாலாஜாபேட்டை அருகே தனியார் பேருந்தின் அடிப்பாகம் திடீரென தீப்பிடித்து, பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து, வாலாஜாபேட்டை அருகே வந்தபோது, பேருந்தின் அடியில் உள்ள டீசல் ஹோல்சில் இருந்து கரும்புகை ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தி, பயணிகளை கீழே இறக்கிவிட்டார். தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், பயணிகள் மற்றும் பேருந்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.