பாணாவரம் அருகே உள்ள புதூர் மேட்டு - தெருவை சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (29). இவர் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். கடந்த 20ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற இளங்கோ பணி முடிந்தவுடன் நள்ளிரவு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பனப்பாக்கம் அருகே உள்ள கலப்பலாம் பட்டு கிராமம் அருகே வந்தபோது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் நிலை தடுமாறி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த இளங்கோ பள்ளத்தில் இருந்த மழைநீரில் மூழ்கி இறந்தார்.
இளங்கோ உடல் புதுாரில் உள்ள மாயனத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணி மாறன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.