ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் உள்ள மீனவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர், வாலாஜாவில் தானப்பன் தெருவில் உள்ள கடையில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற முருகன் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.