ராணிப்பேட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் விபத்து - மாணவர்கள் பத்திரம், மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் சாலை ஓர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். பின்னர், மாணவர்களை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் அவர்களின் வாகனத்தில் பள்ளிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்து மாவட்ட போக்குவரத்து அலுவலர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.