சோளிங்கரில் ரோப்கார் விபத்து பயிற்சி
சோளிங்கரில் மலையில் அமைந்துள்ள யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ரூ. 9 கோடியே 30 லட்சத்தில் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கு ஏறிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் பட்சத்தில், பக்தர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சோளிங்கர் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ரோப்கார் விபத்து ஏற்பட்டால் பக்தர்களை எப்படி மீட்பது என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோவில் உதவி ஆணையர் ஜெயா, கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் ரோப்கார் அமைக்கும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த சோதனையில், ரோப்கார் திடீரென நிறுத்தப்பட்டால், அதில் பயணம் செய்யும் பக்தர்களை பாதுகாப்பாக கீழே இறக்கவும், ரோப்கார் பழுதடைந்தால், அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சோதனை மூலம், ரோப்கார் விபத்து ஏற்பட்டால் பக்தர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.