ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ செடிகள் வழங்கப்பட்டன
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா குடிமல்லூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுதோறும் ஐந்து வகை பழ செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பழகன்றுகளை வழங்கினார். மேலும், பழ செடிகளை நன்றாக பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இத்திட்டம் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் பசுபதிராஜ் கூறுகையில், இந்த நிதியாண்டில் வாலாஜா வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முகுந்தராயபுரம், மாந்தாங்கல், சுமைதாங்கி, பூண்டி, தகரகுப்பம், திருமலைச்சேரி, குடிமல்லூர் உள்ளிட்ட 7 பஞ்சாயத்துகளில் பழ செடி பெற விரும்புவோர் ரூ.150 மானியத்தில் பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் சீத்தா உள்ளிட்ட பழ செடிகளை மரகன்றுகள் பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும், தங்கள் ஆதார் கொண்டு உழவன் செயலியில் முன்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit new/ இணையதளதில் பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை தோட்டகலை உதவி அலுவலர்கள் சுந்தரி மற்றும் அன்பரசு ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் ஊராட்சி மக்கள் வீட்டிற்குள் பழங்கள் சாப்பிடலாம். மேலும், பழங்கள் விற்று வருமானம் ஈட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.