★ 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார்.


🚉 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

👉 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.

👪 1790ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது.


முக்கிய தினம் :-


தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்


✏ வண்ணம் தீட்டுவது சிறுவர்களுக்கிடையே இருக்கும் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.

✏ அதனால் தற்போது இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.


நினைவு நாள் :-


அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்


📞 தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

📞 இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

📞 பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

📞 1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.

📞 ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் தனது 75வது வயதில் 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பிங்கலி வெங்கய்யா


🏁 இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார்.

🏁 இவர் வைரச் சுரங்கம் தோண்டுவதிலும், பருத்தி ஆராய்ச்சியிலும் சாதனை படைத்ததால் 'வைரம் வெங்கய்யா' மற்றும் 'பருத்தி வெங்கய்யா' என்றும் அழைக்கப்பட்டார்.

🏁 கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றதை பார்த்து நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது, வலியுறுத்தினார். 

🏁 காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார். 

🏁 கொடியில் அசோக சக்கரத்தை சேர்க்கலாம் என்று ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் ஆலோசனை கூறினார். அமைதியைக் குறிக்கும் வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என்று காந்திஜி கூற, மூவர்ணங்கள் கொண்ட தேசியக் கொடியை வெங்கய்யா வடிவமைத்தார்.

🏁 கராச்சியில் 1931-ல் நடந்த அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.

🏁 நாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 86வது வயதில் (1963) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது.

கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது.

1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் போது என்றி அட்சன் இன்றைய அட்சன் விரிகுடாவை அடைந்தார்.

1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது.

1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1830 – |பிரான்சின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.

1858 – இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

1870 – உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது.

1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டா வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆத்திரியாவினால் தாரந்தோவில் மூழ்கடிக்கப்பட்டது.

1918 – கனடிய வரலாற்றில் முதல் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.

1922 – சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1932 – பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவரானார்.

1937 – ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.

1939 – அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படகு ஒன்று சப்பானியக் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. லெப். ஜான் எஃப். கென்னடி (பின்னாளைய அமெரிக்க அரசுத்தலைவர்) உயிர் தப்பினார்.

1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாட்சிகளுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. இவ்வதைமுகாமில் 18 மாதங்களில் 900.000 கைதிகள் கொல்லப்பட்டனர்.

1944 – சோசலிச மக்கெடோனியக் குடியரசு உருவானது.

1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நேச நாடுகளின் பொட்ஸ்டாம் உச்சி மாநாடு நிறைவடைந்தது.

1947 – புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன.

1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1973 – மான் தீவில் டக்லசு நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.

1980 – இத்தாலியில் பொலோனா தொடருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

1985 – டெல்ட்டா ஏர்லைன்சு 191 விமானம் டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.

1989 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பில் மீண்டும் இணைந்தது.

1989 – 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.

1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

1999 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் நுழைந்தனர்.

2014 – சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 146 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1834 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சிய சிற்பி (இ. 1904)

1859 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (இ. 1919)

1861 – பிரபுல்லா சந்திர ராய், வங்காளதேச வேதியியலாளர் (இ. 1944)

1876 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (இ. 1963)

1913 – தனிநாயகம் அடிகள், ஈழத்துத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1980)

1923 – சிமோன் பெரெஸ், இசுரேலின் 9வது அரசுத்தலைவர் (இ. 2016)

1926 – ஜோர்ஜ் ஹபாஷ், பாலத்தீனத் தலைவர் (இ. 2008)

1929 – வித்தியா சரண் சுக்லா, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2013)

1930 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)

1932 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)

1941 – சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற லக்சம்பர்கு-பிரான்சிய மருத்துவர்

1945 – பங்கர் ராய், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர்

1950 – கிரகாம் ஆன்கோக், பிரித்தானிய எழுத்தாளர், ஊடகவியலாளர்

1958 – அர்சாத் அயூப், இந்தியத் துடுப்பாளர்

1964 – மேரி லூயீஸ் பார்க்கர், அமெரிக்க நடிகை

1974 – சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளார்

1976 – சாம் வோர்திங்டன், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகர்

1979 – தேவி ஸ்ரீ பிரசாத், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

இன்றைய இறப்புகள்


257 – முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)

686 – ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635)

1819 – அஸிம்-உத்-தவுலா, கர்நாடகத்தின் நவாப் (பி. 1775)

1849 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய அல்பேனியத் தளபதி (பி. 1769)

1922 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-கனடியப் பொறியியலாளர் (பி. 1847)

1957 – ஜார்ஜி யபேர், பிரெஞ்சு உடற்கல்வி பயிற்சியாளர், கோட்பாட்டாளர் (பி. 1875)

1976 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1890)

1996 – வி. பி. கணேசன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர்

2000 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (பி. 1929

2012 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)

2013 – வெ. தட்சிணாமூர்த்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)

2013 – சக்தி அ. பாலையா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (பி. 1925

இன்றைய சிறப்பு நாள்


குடியரசு நாள் (மாக்கடோனியக் குடியரசு)