குறள் : 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
மு.வ உரை :
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால் கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
கலைஞர் உரை :
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
சாலமன் பாப்பையா உரை :
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
Kural 1216
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
Explanation :
Were there no such thing as wakefulness my beloved (who visited me) in my dream would not depart from me.
Horoscope Today: Astrological prediction for August 29, 2023
இன்றைய ராசிப்பலன் - 29.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-08-2023, ஆவணி 12, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 02.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 11.50 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஹயக்ரீவருக்கு- லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். ஓணம் பண்டிகை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 29.08.2023 | Today rasi palan - 29.08.2023
மேஷம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.