குறள் : 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
மு.வ உரை :
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால் (அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
கலைஞர் உரை :
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
சாலமன் பாப்பையா உரை :
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.
Kural 1212
Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku
Uyalunmai Saatruven Man
Explanation :
If my fish-like painted eyes should at my begging close in sleep I could fully relate my suferings to my lord.
Horoscope Today: Astrological prediction for August 24, 2023
இன்றைய ராசிப்பலன் - 24.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-08-2023, ஆவணி 07, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.11 வரை பின்பு வளர்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் காலை 09.04 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 24.08.2023 | Today rasi palan - 24.08.2023
மேஷம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டுத் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். எளிதில் முடியும் காரியங்கள் கூட தாமதமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் அனுகூலமான பலனை அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் விலகும்.