குறள் : 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
மு.வ உரை :
(காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
கலைஞர் உரை :
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.
சாலமன் பாப்பையா உரை :
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.
Kural 1207
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum
Explanation :
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live if I should ever forget it ?
Horoscope Today: Astrological prediction for August 19, 2023
இன்றைய ராசிப்பலன் - 19.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
19-08-2023, ஆவணி 02, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.47 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். ஸ்வர்ண கௌரி விரதம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 19.08.2023 | Today rasi palan – 19.08.2023
மேஷம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி குறையும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.