குறள் : 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
மு.வ உரை :
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
கலைஞர் உரை :
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.
சாலமன் பாப்பையா உரை :
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.
Kural 1203
Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum
Explanation :
I feel as if I am going to sneeze but do not and (therefore) my beloved is about to think (of me) but does not.
Horoscope Today: Astrological prediction for August 15, 2023
இன்றைய ராசிப்பலன் - 15.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-08-2023, ஆடி 30, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி ல் 12.43 வரை பின்பு அமாவாசை. பூசம் நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆடி அமாவாசை விரதம். (திருக்கணிதம்)
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 15.08.2023 | Today rasi palan - 15.08.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் உண்டாகும். சிக்கனமாக இருப்பது நல்லது.
கடகம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் சிக்கனம் தேவை.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது உத்தமம். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.
மகரம்
இன்று நீங்கள் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
கும்பம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மீனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். நீங்கள் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம்.