குறள் : 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
மு.வ உரை :
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
கலைஞர் உரை :
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
Kural 1201
Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu
Explanation :
Sexuality is sweeter than liquor because when remembered it creates a most rapturous delight.
Horoscope Today: Astrological prediction for August 13, 2023
இன்றைய ராசிப்பலன் - 13.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-08-2023, ஆடி 28, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.20 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 08.26 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 13.08.2023 | Today rasi palan - 13.08.2023
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். பயணங்களால் நற்பலன் கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலை யாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் அடையலாம். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் காரியத்தில் வெற்றி காண கடின உழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.