குறள் : 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
மு.வ உரை :
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
கலைஞர் உரை :
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்
சாலமன் பாப்பையா உரை :
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
Kural 1194
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar
Veezhap Pataaar Enin
Explanation :
Even those who are esteemed (by other women) are devoid of excellence if they are not loved by their beloved.
Horoscope Today: Astrological prediction for August 06, 2023
இன்றைய ராசிப்பலன் - 06.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
06-08-2023, ஆடி 21, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.10 வரை பின்பு சஷ்டி பின்இரவு 05.20 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் பின்இரவு 01.43 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 06.08.2023 | Today rasi palan - 06.08.2023
மேஷம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவி தக்க நேரத்தில் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
மிதுனம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வண்டி, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
விருச்சிகம்
இன்று நெருங்கியவர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக காணப்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.