குறள் : 1193

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.


மு.வ உரை :

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.


கலைஞர் உரை :

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்


சாலமன் பாப்பையா உரை :

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.


Kural 1193

Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume

Vaazhunam Ennum Serukku


Explanation :

The pride that says we shall live suits only those who are loved by their beloved (husbands).

Horoscope Today: Astrological prediction for August 05, 2023


இன்றைய ராசிப்பலன் - 05.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

05-08-2023, ஆடி 20, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 09.40 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.54 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் பின்இரவு 02.54 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். தனிய நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 05.08.2023 | Today rasi palan - 05.08.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

தனுசு

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளிமாநில நபருடன் தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. சொத்து சம்பந்தமான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.




கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026