ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். டாக்டரான இவர், தனது காரில் காரை கூட்ரோடு அருகே ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் ரவிச்சந்திரன் காரில் இருந்து இறங்கி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து காரின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.