ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
  • அதனடிப்படையில் இம் மாதத்தில் வரும் 21ம் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
  • இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு. 10ம் வகுப்பு. 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ. டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.