குறள் : 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
மு.வ உரை :
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல் இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
கலைஞர் உரை :
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே
சாலமன் பாப்பையா உரை :
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
Kural 1188
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il
Explanation :
Besides those who say she has turned sallow there are none who say he has forsaken her.
Horoscope Today: Astrological prediction for July 31, 2023
இன்றைய ராசிப்பலன் - 31.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
31-07-2023, ஆடி 15, திங்கட்கிழமை, திரியோதசி திதி காலை 07.27 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி பின்இரவு 03.52 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 31.07.2023 | Today rasi palan - 31.07.2023
மேஷம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்
இன்று உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.
கடகம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கனமுடன் செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
மகரம்
இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் சிக்கலை சமாளித்து லாபம் அடையலாம்.
கும்பம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.