குறள் : 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
மு.வ உரை :
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
கலைஞர் உரை :
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது
சாலமன் பாப்பையா உரை :
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
Kural 1186
Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu
Explanation :
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husbands intercourse.
Horoscope Today: Astrological prediction for July 29, 2023
இன்றைய ராசிப்பலன் - 29.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-07-2023, ஆடி 13, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 11.34 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 29.07.2023 | Today rasi palan - 29.07.2023
மேஷம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
கடகம்
இன்று பிள்ளைகள் வகையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
மகரம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.