குறள் : 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
மு.வ உரை :
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்ளூ இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
கலைஞர் உரை :
என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்
சாலமன் பாப்பையா உரை :
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?
Kural 1185
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu
Explanation :
Just as my lover departed then did not sallowness spread here on my person ?
Horoscope Today: Astrological prediction for July 28, 2023
இன்றைய ராசிப்பலன் - 28.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-07-2023, ஆடி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 02.52 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 12.55 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 12.55 வரை பின்பு மரணயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 28.07.2023 | Today rasi palan - 28.07.2023
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் செய்ய நேரிடும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய கடினமாக உழைக்க நேரிடும். நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
துலாம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும்.
கும்பம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிட்டும். குடும்பத்தில் உடன்பிறப்புடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.