குறள் : 1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.


மு.வ உரை :

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

கலைஞர் உரை :

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

சாலமன் பாப்பையா உரை :

இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.


Kural 1182

Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen

Menimel Oorum Pasappu

Explanation :

Sallowness as if proud of having been caused by him would now ride on my person.


Horoscope Today: Astrological prediction for July 25, 2023


இன்றைய ராசிப்பலன் - 25.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

25-07-2023, ஆடி 09, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 03.09 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சித்திரை நட்சத்திரம் இரவு 12.03 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 25.07.2023 | Today rasi palan - 25.07.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் உங்கள் திறமைகேற்ப உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர், செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

துலாம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பிறகு அனுகூலம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும்.

மீனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026