குறள் : 1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.


மு.வ உரை :

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்ளூ அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

கலைஞர் உரை :

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

சாலமன் பாப்பையா உரை :

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!


Kural 1178

Penaadhu Pettaar Ularmanno Matravark

Kaanaadhu Amaivila Kan

Explanation :

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes sufer from not seeing him.


Horoscope Today: Astrological prediction for July 21, 2023


இன்றைய ராசிப்பலன் - 21.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

21-07-2023, ஆடி 05, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 06.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் பகல் 01.57 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 01.57 வரை பின்பு சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  


இன்றைய ராசிப்பலன் - 21.07.2023 | Today rasi palan - 21.07.2023

மேஷம்

இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.

கடகம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் பழகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் வேற்று மொழி நபர்களின் நட்பு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026