குறள் : 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
மு.வ உரை :
(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள் பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
கலைஞர் உரை :
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது
சாலமன் பாப்பையா உரை :
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
Kural 1169
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa
Explanation :
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
Horoscope Today: Astrological prediction for July 12, 2023
இன்றைய ராசிப்பலன் - 12.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
12-07-2023, ஆனி 27, புதன்கிழமை, தசமி திதி மாலை 06.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பரணி நட்சத்திரம் இரவு 07.43 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் இரவு 07.43 வரை பின்பு அமிர்தயோகம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 12.07.2023 | Today rasi palan - 12.07.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் அடையும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் நிலவும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் முடிந்த வரை தலையிடாமல் இருப்பது நல்லது.
துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை விலகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026