குறள் : 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
மு.வ உரை :
மு.வ : இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
கலைஞர் உரை :
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை
சாலமன் பாப்பையா உரை :
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
Kural 1162
Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku
Uraiththalum Naanuth Tharum
Explanation :
I cannot conceal this pain nor can I relate it without shame to him who has caused it.
Horoscope Today: Astrological prediction for July 05, 2023
இன்றைய ராசிப்பலன் - 05.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
05-07-2023, ஆனி 20, புதன்கிழமை, துதியை திதி பகல் 10.02 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.56 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பின்இரவு 02.56 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 05.07.2023 | Today rasi palan - 05.07.2023
மேஷம்
இன்று உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.
துலாம்
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
தனுசு
இன்று உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையால் மனநிம்மதி குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்ய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன்கள் குறையும்.
மீனம்
இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.