குறள் : 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
மு.வ உரை :
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன் ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
கலைஞர் உரை :
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்
சாலமன் பாப்பையா உரை :
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
Kural 1161
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku
Ootruneer Pola Mikum
Explanation :
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
Horoscope Today: Astrological prediction for July 04, 2023
இன்றைய ராசிப்பலன் - 04.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
04-07-2023, ஆனி 19, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி பகல் 01.38 வரை பின்பு தேய்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் காலை 08.25 வரை பின்பு உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.39 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 08.25 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.39 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 04.07.2023 | Today rasi palan - 04.07.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 01.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.