குறள் : 1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.


மு.வ உரை :

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லைளூ வந்தாலும் தூங்குவதில்லைளூ இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

கலைஞர் உரை :

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்

சாலமன் பாப்பையா உரை :

அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி? தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.


Kural 1179

Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai

Aaragnar Utrana Kan

Explanation :

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case mine eyes endure unbearable agony.


Horoscope Today: Astrological prediction for July 22, 2023


இன்றைய ராசிப்பலன் - 22.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

22-07-2023, ஆடி 06, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 09.26 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரம் நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் மாலை 04.58 வரை பின்பு மரணயோகம். ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 22.07.2023 | Today rasi palan - 22.07.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். எதிலும் யோசித்து செயல்பட்டால் அனுகூலங்கள் ஏற்படும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத சுபசெலவுகள் தோன்றும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இதுவரை இருந்த தேக்க நிலை சற்று மாறும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். வருமானம் பெருகும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026