👉 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

👉 1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்தில் பிறந்தார். 

👉 1998ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது.

👉 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கல் ஜாக்சன் மறைந்தார். 


முக்கிய தினம் :-


உலக வெண்புள்ளி தினம்

👉 உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மாலுமிகள் தினம்

👉 உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல் சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.


பிறந்த நாள் :-


வி.பி.சிங்

👉 இந்தியாவின் முன்னாள் பிரதமரான விஷ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார். 

👉 1969ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், 1971-ல் முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். பிறகு, 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார். 

👉 இவர் டிசம்பர் 2, 1989-லிருந்து நவம்பர் 10, 1990 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த இவர் தனது 77வது வயதில் (2008) மறைந்தார். 

இன்றைய தின நிகழ்வுகள்


1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார்.

1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.

1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார்.

1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர்.[1] ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.[2]

1900 – தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தார்.

1910 – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது.

1935 – சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.

1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.

1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.

1960 – பனிப்போர்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.

1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

1975 – போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

1981 – மைக்ரோசாப்ட் வாசிங்டனில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1983 – இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

1991 – குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.

1996 – சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

1997 – ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.

1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.

2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

2017 – ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.

இன்றைய தின பிறப்புகள்


1852 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1926)

1896 – சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம், இலங்கை அரசியல்வாதி

1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (இ. 1979)

1900 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய-சோவியத் வானியலாளர் (இ. 1969)

1903 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1950)

1908 – சுசேதா கிருபளானி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் (இ. 1974)

1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்

1931 – வி. பி. சிங், இந்தியாவின் 7வது பிரதமர் (இ. 2008)

1933 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (இ. 2000)

1935 – ஆர். சிவலிங்கம், இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர்

1959 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியலாளர் (இ. 1996)

1961 – ரிக்கி கேர்வைஸ், ஆங்கிலேய நடிகர், இயக்குநர்

1962 – நடராஜா ரவிராஜ், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 2006)

1972 – சைஃப் அல்-இசுலாம் கதாஃபி, லிபிய அரசியல்வாதி

1975 – விளாடிமிர் கிராம்னிக், உருசிய சதுரங்க வீரர்

1978 – அப்தப் சிவதசனி, இந்தியத் திரைப்பட நடிகர்

1981 – பூஜா, தென்னிந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1671 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தானிய மதகுரு, வானியலாளர் (பி. 1598)

1772 – முத்து வடுகநாதர், சிவகங்கை பாளைய மன்னர்

1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 5வது அரசுத்தலைவர் (பி. 1837)

1960 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (பி. 1893)

1965 – பெர்ட்டில் இலிண்ட்பிளாடு, சுவீடிய வானியலாளர் (பி. 1895)

1984 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1926)

2007 – ஜீவா, இந்திய திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1963)

2007 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் திரைப்பட நடிகை (பி. 1979)

2009 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1958)

2010 – ஜெ. சுத்தானந்தன், கல்வியாளர், சமூக சேவகர் (பி. 1944)

இன்றைய தின சிறப்பு நாள்


மர நாள் (பிலிப்பீன்சு)

விடுதலை நாள் (மொசாம்பிக், போர்த்துகலிடம் இருந்து 1975)

ஆசிரியர் நாள் (குவாத்தமாலா)

உலக தோல் நிறமி இழத்தல் நாள்