ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்திலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இல்லத்திலிருந்து பள்ளிக்கு சென்ற மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பாலமுருகன் (15) இவர் 10-ம் வகுப்பு செல்லவில்லை. திரும்ப இல்லத்திற்கும் வரவில்லை.
இதை தொடர்ந்து இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா ரோடு ரெயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன் ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசாரர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.