வாலாஜாவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60) இவர் கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்று ரூ.5 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது பைக்கின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது வழியில் சோளிங்கர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்தபோது பைக் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலாஜாவை சேர்ந்த பிரதீப்குமார் (22) என்பவர் கோவிந்தராஜின் பணத்தை திருடியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.