ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க இளைஞர் அணி ஒன்றிய, நகர,பேரூர் ஆகிய பகுதிகளுக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைத்து, விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஒட்டி , விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவர ங்களையும் தெளிவா கவும், முழுமையாகவும் நிரப்ப வேண்டும்.
ஏற்கனவே இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்பிற்கு வர விரும்பினால் அவர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.