குறள் : 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
மு.வ உரை :
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
கலைஞர் உரை :
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்
சாலமன் பாப்பையா உரை :
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.
Kural 1156
Pirivuraikkum Vankannar Aayin Aridhavar
Nalkuvar Ennum Nasai
Explanation :
If he is so cruel as to mention his departure (to me) the hope that he would bestow (his love) must be given up.
Horoscope Today: Astrological prediction for June 30, 2023
இன்றைய ராசிப்பலன் - 30.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
30-06-2023, ஆனி 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. விசாகம் நட்சத்திரம் மாலை 04.10 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 30.06.2023 | Today rasi palan - 30.06.2023
மேஷம்
இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 10.19 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.
கடகம்
இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய நபர் அறிமுகத்தால் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கும்பம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.19 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.