குறள் : 1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.


மு.வ உரை :

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும் அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

கலைஞர் உரை :

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்

சாலமன் பாப்பையா உரை :

என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.


Kural 1155

Ompin Amaindhaar Pirivompal Matravar

Neengin Aridhaal Punarvu

Explanation :

If you would save (my life) delay the departure of my destined (husband); for if he departs intercourse will become impossible.


Horoscope Today: Astrological prediction for June 28, 2023


இன்றைய ராசிப்பலன் - 28.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

28-06-2023, ஆனி 13, புதன்கிழமை, தசமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 04.00 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 


இன்றைய ராசிப்பலன் - 28.06.2023 | Today rasi palan - 28.06.2023

மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமை விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி எளிதில் கிட்டும். உத்தியோக ரீதியாக ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026