குறள் : 1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.


மு.வ உரை :

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

கலைஞர் உரை :

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

சாலமன் பாப்பையா உரை :

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!


Kural 1152

Inkan Utaiththavar Paarval Pirivanjum

Punkan Utaiththaal Punarvu

Explanation :

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.


Horoscope Today: Astrological prediction for June 25, 2023


இன்றைய ராசிப்பலன் - 25.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


25-06-2023, ஆனி 10, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.11 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.11 வரை பின்பு அமிர்தயோகம். ஆனி திருமஞ்சனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 25.06.2023 | Today rasi palan - 25.06.2023

மேஷம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கடகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும்.

துலாம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மீனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.



கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026