குறள் : 1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.


மு.வ உரை :

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல் கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

கலைஞர் உரை :

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்

சாலமன் பாப்பையா உரை :

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.


Kural 1145

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam

Velippatun Thorum Inidhu

Explanation :

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth so is lust delightful to me whenever it is the subject of rumour.


Horoscope Today: Astrological prediction for June 18, 2023


இன்றைய ராசிப்பலன் - 18.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

18-06-2023, ஆனி 03, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 10.07 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.06 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 18.06.2023 | Today rasi palan - 18.06.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சினை குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று- உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.

தனுசு

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

கும்பம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026