குறள் : 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
மு.வ உரை :
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
கலைஞர் உரை :
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்
சாலமன் பாப்பையா உரை :
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
Kural 1144
Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu
Explanation :
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.
Horoscope Today: Astrological prediction for June 17, 2023
இன்றைய ராசிப்பலன் - 17.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-06-2023, ஆனி 02, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 09.12 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.25 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.25 வரை பின்பு சித்தயோகம். சர்வ அமாவாசை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 17.06.2023 | Today rasi palan - 17.06.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
தனுசு
இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியான பிரச்சினைகளில் சாதகமான பலன் கிட்டும்.
மகரம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.
மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.