குறள் : 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
மு.வ உரை :
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
கலைஞர் உரை :
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்
சாலமன் பாப்பையா உரை :
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
Kural 1140
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru
Explanation :
Even strangers laugh (at us) so as to be seen by us for they have not suffered.
Horoscope Today: Astrological prediction for June 13, 2023
இன்றைய ராசிப்பலன் - 13.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-06-2023, வைகாசி 30, செவ்வாய்க்கிழமை, தசமி திதி காலை 09.29 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ரேவதி நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 13.06.2023 | Today rasi palan - 13.06.2023
மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் நிதானம் தேவை.
சிம்மம்
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 1.32 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் கிட்டும்.