குறள் : 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
மு.வ உரை :
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
கலைஞர் உரை :
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்
சாலமன் பாப்பையா உரை :
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
Kural 1135
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar
Explanation :
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
Horoscope Today: Astrological prediction for June 08, 2023
இன்றைய ராசிப்பலன் - 08.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
08-06-2023, வைகாசி 25, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.59 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் மாலை 06.59 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 08.06.2023 | Today rasi palan - 08.06.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கடகம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஒரளவு குறையும். எதிலும் நிதானம் தேவை.
துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக செய்யும் செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.