குறள் : 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
மு.வ உரை :
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
கலைஞர் உரை :
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது
சாலமன் பாப்பையா உரை :
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
Kural 1158
Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum
Innaadhu Iniyaarp Pirivu
Explanation :
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from ones lover.
Horoscope Today: Astrological prediction for July 01, 2023
இன்றைய ராசிப்பலன் - 01.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
01-07-2023, ஆனி 16, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 11.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். சனிப் பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 01.07.2023 | Today rasi palan - 01.07.2023
மேஷம்
இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.
தனுசு
இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கும்பம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026