ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பாரத்மிகுமின் நிறு வனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்டர்னல் செலக்ஷன் என்கிற முறை வாயிலாக 'ரிக்கர் ஜி.ஆர்- 4' தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பயிற்சியை நிறைவு செய்த பிறகும் அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகம் அலைக்கழித்து வருகிறதாம். இதனால் அந்த ஊழியர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாகவும் இந்த மெத்தன போக்கை கடைபிடிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிற்சாலை முன்பு நேற்று காலை பி.ஏ.பி/இஜிடியூ தொழிற்சசங்க செயலாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பதவி உயர்வு கேட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.