ஆற்காடு உள்ளிட்ட 3 துணை மின் நிலையங்களில் 2 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆற்காடு மின் கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆற்காடு துணை மின் நிலையம், கத்தியவாடி துணை மின் நிலையம் மற்றும் ஆனைமல்லூர் துணை மின் நிலையம் ஆகியவற்றில் பல் வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது.
எனவே வருகிற 13ம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கத்தியவாடி, விஷாரம் பிரிவுக்கு உட்பட்டடேனேரி ரோடு, ஹாஜிப் பேட்டை, ஹன்சா நகர், பாகர் தெரு, புதுப்பேட்டை, புளியமரம் பஸ் நிறுத்தம், புளிமாதா தெரு, மீரா சாகிப் தெரு, சவுக்கார் தெரு, முத்துஜா தெரு மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட முப்பதுவெட்டி, கிளைவ் பஜார் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதேபோல் 14ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை காவனூர் பிரி வுக்கு உட்பட்ட புங்கனூர், காவனூர், வெள்ளக்குளம், எல்லாசிகுடிசை, குப்பம், கண்ணடிபாளையம் மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட உப்புபேட்டை, கூராம்பாடி, கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.