வாலாஜாவை அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 64). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று 100 நாள் வேலைக்கு சென்ற அவர் மதிய உணவு இடைவேளை யின்போது படுத்து தூங்கினார்.
நீண்ட நேரமாகியும் வேலைக்கு வராததால் சக ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் தூக்கத்திலேயே இறந்துபோனது தெரியவந்தது.
தகவலறிந்த வாலாஜா போலீசார் விரைந்து சென்று பரசுராமனின் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.